இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமித் ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக அமித் ஷா விலக வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எம்பிக்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாக பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி புகார் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுல்காந்தி விளக்கமளித்துள்ளார் அதில்,
பாஜக எம்.பி.க்கள் என்னை தள்ளிவிட்டனர்
நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் என்னை தள்ளிவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்தார். நாடாளுமன்றத்திற்குள் நான் செல்ல முயன்றபோது என்னை பாஜக -எம்.பி.க்கள் தடுக்க முயன்றனர். பாஜக எம்.பி.க்கள் என்னை தள்ளிவிட்டதுடன் -மிரட்டவும் செய்தனர்.
பாஜக மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்
பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிடுவதற்கெல்லாம் நாங்கள் அஞ்சிவிட மாட்டோம். நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கு இதுதான் வழி; அங்கு செல்ல எங்களுக்கு உரிமை உண்டு. நாடாளுமன்றத்துக்குள் செல்ல விடாமல் பாஜக எம்.பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர். அரசியல் சட்டத்தையே பா.ஜ.க.வினர் தாக்குகின்றனர் என்பதுதான் முக்கிய பிரச்சனை. அம்பேத்கரை பாஜகவினர் அவமதிக்கின்றனர் என்பதே இப்போது உள்ள பிரச்சனை. செய்தியாளர்களின் கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தாலே என்ன நடந்தது என தெரியும். ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாக பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி புகார் கூறிய நிலையில் ராகுல் விளக்கம் அளித்தார்.
The post பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிடுவதற்கெல்லாம் நாங்கள் அஞ்சிவிட மாட்டோம்; நாடாளுமன்றத்திற்கு செல்ல எங்களுக்கு உரிமை உண்டு: ராகுல் காந்தி appeared first on Dinakaran.