53 ஆண்டுக்கு பின் முதன்முறையாக சிரியாவுக்குள் கால்பதித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு:அதிபர் ரஷ்யாவில் தஞ்சமடைந்த நிலையில் திருப்பம்

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முதன்முறையாக சிரியாவின் ஹெர்மன் மலைப்பகுதிக்கு சென்றதால் சர்வதேச கவனத்தை பெற்றார். இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் குன்றுகளின் எல்லையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் (6 மைல்) தொலைவில் சிரியா மலைப் பகுதிக்கு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சென்றிருந்தார். அங்கு பாதுகாப்பு படையினருடன் அவர் உரையாற்றினார். பதவியில் இருக்கும் இஸ்ரேல் தலைவர் ஒருவர், சிரியாவிற்குள் காலடி வைத்தது இதுவே முதன்முறையாகும். ஏற்கனவே கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு ஹெர்மோன் மலைப்பகுதிக்கு நெதன்யாகு சென்றிருந்தார். அப்போது அவர் ராணுவ வீரராக இருந்தார்.

சிரியா அதிபர் பஷர் ஆசாத், கிளர்ச்சி படைகளின் தொடர் போராட்டத்தால் நாட்டை விட்டு வெளியேறினார். அதனால் தற்போது சிரியா நாடு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோலன் குன்றுகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், கடந்த 1974 போர்நிறுத்தத்தை மீறியதாகவும், சிரியாவை சுரண்டுவதாகவும் குற்றம்சாட்டு எழுந்துள்ளது. முன்னதாக சிரியா மலைப்பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நெதன்யாகு பேசுகையில், ‘இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய வழிவகைகள் செய்யப்படும். அதுவரை இப்பகுதியில் ராணுவ நடவடிக்கைகள் இருக்கும்’ என்றார்.

The post 53 ஆண்டுக்கு பின் முதன்முறையாக சிரியாவுக்குள் கால்பதித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு:அதிபர் ரஷ்யாவில் தஞ்சமடைந்த நிலையில் திருப்பம் appeared first on Dinakaran.

Related Stories: