கெங்கவல்லி, டிச.18: கெங்கவல்லி நடுவலூர் ஊராட்சியில், எம்பி நகர் பகுதியில் பழமையான பொது கிணறு உள்ளது. 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தற்போது பெய்த கனமழையால் 30 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. சமத்துவபுரம், எம்பி நகர் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நடுவலூர் ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று நடுவலூர் ஊராட்சி பணியாளர் தண்ணீர் எடுத்து விடுவதற்காக சென்றபோது மின்மோட்டாரின் அலுமினிய ஒயர் மர்ம நபரால் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் நடுவலூர் ஊராட்சி தலைவர் மூக்கன், ஊராட்சி செயலாளர் மலர்விழிக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு அவர்கள் சென்று பார்த்தபோது, அலுமினிய ஒயர்கள், மின் மோட்டாரை இயக்கும் சாட்டர் மர்ம நபரால் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மலர்விழி, கெங்கவல்லி எஸ்ஐ கணேஷ்குமாரிடம் புகாரளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post மின் மோட்டாரில் ஒயர் திருட்டு appeared first on Dinakaran.