பிபா கால்பந்தாட்ட விருதுகள் அறிவிப்பு பிரேசிலின் வினிசியஸ் தலை சிறந்த வீரர்

தோஹா: கால்பந்து சங்கத்தின் சர்வதேச நிர்வாக கூட்டமைப்பான ஃபிபா, நடப்பாண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரியல் மாட்ரிட் அணியின், பிரேசிலை சேர்ந்த வினிசியஸ் ஜூனியரை அறிவித்துள்ளது. பார்சிலோனாவின் அய்டானா பொன்மாட்டி, 2வது ஆண்டாக நடப்பாண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தோஹாவில் நடந்த விழாவில் தலைசிறந்த வீரருக்கான விருதை பெற்றுக்கொண்ட வினிசியஸ் கூறுகையில், ‘அனைவருக்கும் நன்றி.
இந்த இடத்துக்கு வரவே முடியாது என நினைத்தேன். வறுமை உலகில், குற்றங்கள் நிறைந்த சூழலில் வளர்ந்தவன் நான். அந்த சூழலில் வளர்ந்த எல்லா குழந்தைகளுக்கும் விருதை அர்ப்பணிக்கிறேன். எனக்கு ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி’ என்றார். பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்ற ஸ்பெயின் வீராங்கனை அய்டானா பொன்மாட்டி (26) நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த விருதை பெற்றுக் கொள்வதில் பெருமகிழ்ச்சி’ என்றார்.

The post பிபா கால்பந்தாட்ட விருதுகள் அறிவிப்பு பிரேசிலின் வினிசியஸ் தலை சிறந்த வீரர் appeared first on Dinakaran.

Related Stories: