தொடர் நாயகன் ஹாரி புரூக்

* தொடர் நாயகனாக இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டார். அவர் இந்த தொடரில் 2 சதம், 2 அரை சதம் உட்பட 350 ரன் விளாசியுள்ளார்.

* நியூசிலாந்து டெஸ்ட் வரலாற்றில் இதற்கு முன்பு பலமுறை இன்னிங்ஸ் வெற்றிகளை குவித்திருந்தாலும் ரன் அடிப்படையில் இப்படி வெற்றி பெறுவது 2வது முறை. இதற்கு முன்பு 2018ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 660 ரன் இலக்காக நிர்ணயித்து, இதே 423 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று இருந்தது.

* இந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 76 ரன், 3 விக்கெட், 2வது இன்னிங்சில் 49 ரன், 4விக்கெட் எடுத்த நியூசி வீரர் மிட்செல் சான்ட்னர் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

* இந்த தொடரில் அதிக ரன் விளாசிய வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (395ரன்), அதிக விக்கெட் எடுத்தோர் பட்டியலில் இங்கிலாந்தின் பிரைடன் கர்ஸ் (18விக்கெட்) முதலிடத்தில் உள்ளனர்.

The post தொடர் நாயகன் ஹாரி புரூக் appeared first on Dinakaran.

Related Stories: