33 ஆண்டு சாதனையை தகர்த்த பும்ரா – ஆகாஷ்

பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் 10வது விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 39 ரன் குவித்த இந்திய வீரர்கள் என்ற சாதனையை ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா அரங்கேற்றி உள்ளனர். இவர்கள் இருவரும் நேற்றைய போட்டியில் ஜோடி சேர்ந்தபோது ஸ்கோர், 9 விக்கெட் இழப்புக்கு 213 ஆக இருந்தது. ஃபாலோ ஆன் தவிர்க்க இன்னும் 33 ரன் தேவை என்ற நிலையில் இருவரும் அற்புதமாகவும் பொறுப்புடனும் ஆடி அணியின் ஸ்கோரை கவுரவமாக உயர்த்தியதுடன் ஃபாலோ ஆனையும் தவிர்த்தனர்.

கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த அவர்கள், இந்தியஅணியில் 10வது விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 39 ரன் குவித்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன் 1991ல் காபா மைதானத்தில் மனோஜ் பிரபாகர் – ஜவகல் ஸ்ரீநாத் ஜோடி 33 ரன் எடுத்ததே 10 விக்கெட்டுக்கு அதிபட்ச இந்திய ஸ்கோராக இருந்து வந்தது. 33 ஆண்டுக்கு பின் அந்த சாதனை தற்போது தகர்க்கப்பட்டுள்ளது.

The post 33 ஆண்டு சாதனையை தகர்த்த பும்ரா – ஆகாஷ் appeared first on Dinakaran.

Related Stories: