- கொடுமுடியாறு நீர்த்தேக்கம்
- நீர்வளத் துறை
- சென்னை
- திருநெல்வேலி மாவட்டம்
- வள்ளியூரங்கல்
- பாடலையார்க்கால்
- ஆத்துக்கல்
- வடமலையங்கல்
சென்னை: திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வள்ளியூரான்கால், படலையார்கால், ஆத்துக்கால் மற்றும் வடமலையான்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம்பெறும் நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடி செய்வதற்கு இன்று முதல் 31.3.2025 வரை 104 நாட்களுக்கு வினாடிக்கு 100 கன அடி அளவுக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் நாங்குனேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அரசு தெரிவித்துள்ளது.
The post கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு நீர் திறப்பு: நீர்வளத்துறை உத்தரவு appeared first on Dinakaran.