×

நேரு குறித்து அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை: காங்கிரசார் போலீசில் புகார்

சென்னை: முன்னாள் பிரதமர் நேரு தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் காமெடி செய்த பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார். இந்த நிலையில், பரத் பாலாஜியை கைது செய்யக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொடர்பு, சமூக ஊடகத்துறை மாநில தலைவர் கே.டி.லட்சுமி காந்தன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜசேகரன் ஆலோசனைப்படி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். அப்துல் ரகுமான், சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அதில், இந்தியாவின் முதல் பிரதமரும், 17 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக இந்தியாவை செதுக்கிய இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேருவின் பெயருக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் நோக்கத்தில் இழிவாகவும் கீழ்தரமாகவும் சுதந்திரப் போராட்ட வரலாற்றையே கேலி பேசி கொச்சைப்படுத்திள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களின் தன்மானம் காக்க பரத் பாலாஜியை கைது செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்..

The post நேரு குறித்து அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை: காங்கிரசார் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Nehru ,Congressional Police ,Chennai ,Congress ,Selwapperundagai ,Tamil Nadu government ,Bharat Balaji ,
× RELATED முன்னாள் பிரதமர் நேரு குறித்து...