- டிஜிபி
- நார்விச்
- சுதந்திர
- சென்னை
- பொது செயலகம்
- ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு
- விருதுநகர்
- தலைமை செயலகம்
- தின மலர்
சென்னை: தலைமை செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் விருதுநகரில் இருந்து அழைப்பு வந்தால் தனிப்படை ஒன்று விருதுநகருக்கு விரைந்துள்ளது.
சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் ஒருவர் ‘ இன்னும் சற்று நேரத்தில் தலைமை செயலகம், டிஜிபி அலுவலகத்தில் வைத்துள்ள வெடி குண்டு வெடிக்கும் என்றும், முடிந்தால் காப்பாற்றி கொள்ளுங்கள்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத பணியில் இருந்த காவலர், உடனே சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
அதன்படி கோட்டை மற்றும் மெரினா போலீசார் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தலைமை செயலகம் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த ெவடி குண்டும் சிக்கவில்லை. இதனால் இது வெறும் புரளி என தெரியவந்தது. வெடி குண்டு மிரட்டல் இரவு நேரம் விடுக்கப்பட்டதால் தலைமை செயலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பதற்றமான நிலை ஏற்படவில்லை. இருந்தாலும் டிஜிபி அலுவலகத்தில் சற்று பதற்றமான நிலை இருந்தது.
அதைதொடர்ந்து கோட்டை மற்றும் மெரினா போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் காவல்கட்டுப்பாட்டு அறைக்கு வந்த எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கைது செய்ய சென்னை பெருநகர துறையில் இருந்து தனிப்படை ஒன்று விரைந்துள்ளது.
The post சற்று நேரத்தில் வெடிக்கும் என்று கூறி இணைப்பு துண்டிப்பு; தலைமை செயலகம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: விருதுநகருக்கு விரைந்தது தனிப்படை appeared first on Dinakaran.