×

தமிழ்நாடு நீர்வளத்துறையில் மின்னணு அலுவலக நடைமுறை செயலாக்கம்: அதிகாரிகளுக்கு 7 நாள் பயிற்சி

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறையில் மின்னணு அலுவலக நடைமுறை செயலாக்கம் தொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நீர்வளத்துறையின் அலுவலக நடைமுறைகளை மின்னணு முறை (E-Office) மூலமாக நடைமுறைப்படுத்த தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) மூலம் பிரத்யேகமாக மென்பொருள் உருவாக்கப்பட்டு சுமார் 4500 பயனாளர்களுக்கு உள்நுழைவு அடையாள குறியீடு (Login ID) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதற்கட்டமாக நேற்று, அலுவலக நடைமுறைகளை மின்னணு மூலமாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக தலைமைப் பொறியாளர்கள், இணைத்தலைமைப் பொறியாளர்கள், துணைத்தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பயிலரங்கத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. முதற்கட்ட பயிற்சி 7 நாட்கள் நடைபெறும். மேலும், இப்பயிற்சி பல கட்டங்களாக வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது என நீர்வளத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு நீர்வளத்துறையில் மின்னணு அலுவலக நடைமுறை செயலாக்கம்: அதிகாரிகளுக்கு 7 நாள் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Water Resources Department ,Chennai ,Water Resources Department ,Tamil Nadu E-Governance Agency ,TNeGA ,
× RELATED தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்த ஏரி: தூர்வாரி சீரமைக்க கோரிக்கை