மேலும், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து 24, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா போட்டிகள் நடக்கிறது. இதனை முன்னிட்டு 24ம் தேதி காலை 10.30 மணிக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், 26 ம் தேதி காலை 10.30 மணிக்கு பேச்சு போட்டியும், 28ம் தேதி காலை 10.30 மணிக்கு வினாடி, வினா போட்டியும் திருவள்ளூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் திருக்குறளில் ஏதேனும் 5 அதிகாரங்கள் வரிசை மாறாமல் பொருள் உணர்ந்து உச்சரிப்பு பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும்.
பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளும் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும். வினாடி வினா போட்டியில் மாணவர்கள் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் திருக்குறள் தொடர்பான வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இதில் கலந்து கொள்வோர் தங்களின் பெயரை மாவட்ட மைய நூலகத்தில் 9840530459, 9445700215, 9787369677 தொடர்பு கொண்டு வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் டிசம்பர் 31ம் தேதி வழங்கப்படும். மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட மைய நூலக அதிகாரி கூறியுள்ளார்.
The post குமரி திருவள்ளுவர் சிலை குறித்த வெள்ளி விழா போட்டிகள்: மாவட்ட மைய நூலக அதிகாரி தகவல் appeared first on Dinakaran.