இதையடுத்து, மாலை உற்சவர் ஐயப்பனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், ஜவ்வாது, திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடையில் வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்த புலி வாகனத்தில் உற்சவர் ஐயப்பனை வைத்து கேரளா செண்டை மேளம், வாத்தியங்கள் முழங்க பெரியபாளையம் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள் கலந்துகொண்டு கையில் தீபம் ஏந்தி சாமியே சரணம் ஐயப்பா என கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்று மீண்டும் கோயிலை சென்றடைந்தனர். அங்கு ஐயப்ப சுவாமி சிறப்பு பூஜையில் 18 படிகளை அமைத்து பஜனை பாடல்களை பாடினர். பின்னர் மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
The post ஐயப்ப சுவாமியின் 21ம் ஆண்டு திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.