ஆவடியில் இருந்து புதுவாயல் வரை மாநகர பேருந்து சேவை நீட்டிப்பு: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே ஆரணியில் மாநகர பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டதை அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்து, பேருந்தில் பயணித்தார். ஆவடியில் இருந்து ஆரணி வரை மாநகர பேருந்து (தடம் எண் 580) சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து சேவையை புதுவாயல் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் பேருந்து சேவை நீட்டிக்கும் நிகழ்ச்சி பெரியபாளையம் அடுத்த ஆரணியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.

பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர், மாவட்ட திமுக அவைத்தலைவர் பகலவன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் உமா மகேஸ்வரி, கதிரவன், எம்.எல்.ரவி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அன்புவாணன், ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் செல்வசேகரன், சத்தியவேலு, பாஸ்கர் சுந்தரம், கன்னிகை ஸ்டாலின், வெற்றி (எ) ராஜேஷ், ஜான் பொன்னுசாமி, டி.ஜெ.ஜி.தமிழரசு, கரிகாலன், கண்ணதாசன், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ஆரணி பேரூர் செயலாளர் பி.முத்து வரவேற்றார். இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு கொடி அசைத்து பேருந்து சேவையை நீட்டித்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, அமைச்சர் நாசர், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகர், டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் நீட்டிக்கப்பட்ட பேருந்து சேவையின் வழி தடத்தில் பேருந்தில் ஏறி பயணித்தனர். அப்போது நடத்துனரிடம் அமைச்சர், எம்எல்ஏக்கள் பயணசீட்டை பெற்று கொண்டனர்.பேருந்து சேவையை நீடித்ததை தொடர்ந்து பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ரஷீத், நகர செயலாளர் அபிராமி, பேரூராட்சி துணை தலைவர் சுகுமார், கோபிநாத் மற்றும் வார்டு கவுன்சிலர், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஆவடியில் இருந்து புதுவாயல் வரை மாநகர பேருந்து சேவை நீட்டிப்பு: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: