அதுமட்டுமின்றி, சென்னை புறநகர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 2022ம் ஆண்டு சென்னை எல்லை சாலைத்திட்டத்தின் கீழ் எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை வரை ரூ.12,301 கோடி திட்ட மதிப்பீட்டில் 133 கிலோ மீட்டர் தொலைவிற்கு 6 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த பணி பிரிவு ஒன்றின்படி எண்ணூர் முதல் தச்சூர் வரை 25 கிலோ மீட்டர் தொலைவிலும், பிரிவு இரண்டு படி தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரை 13 கிலோ மீட்டர் வரையிலும், பிரிவு மூன்றின்படி திருவள்ளூர் நெடுஞ்சாலை முதல் வெங்கத்தூர் வரையிலும், பிரிவு 4ன்படி ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோவில் வரை 24 கிலோ மீட்டர் வரையும், பிரிவு ஐந்தின் படி சிங்கப்பெருமாள் கோவில் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி வரை 30 கிலோ மீட்டர் என மொத்தம் 133 கிலோ மீட்டர் வரை இந்த சாலைப்பணி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த சாலை அமையும் வழித்தடங்களில் 349 பாலங்கள், 5 பெரிய பாலங்கள், 20 சிறிய பாலங்கள், 324 தரைப்பாலங்கள், 49 சுரங்க வழிகள், 4 மேம்பாலங்கள், 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. 81 கிராமங்கள் வழியாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், இரண்டாவது பிரிவாக நடைபெறும் தச்சூர் முதல் புன்னப்பாக்கம் வரையிலான சாலைப்பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. எனவே, கட்டுமான பணிகள் காரணமாக சாலைகள் குண்டும், குழியுமாகவும், வளைவுகளாகவும் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. வருகின்ற 2025ம் ஆண்டுக்குள் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால் பணிகளை துரிதப்படுத்தி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post எண்ணூர் துறைமுகம் – மாமல்லபுரம் பூஞ்சேரி இசிஆர் சாலை: 6 வழிச்சாலை பணிகளில் தொய்வு: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.