நான் முதல்வன் திட்டத்தில் 7,910 மாணவர்களுக்கு பல்வேறு பிரிவில் பயிற்சி கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 7,910 மாணவர்கள் பல்நோக்கு திறன் கொண்டவர்களாக பணி அமர்த்தப்படுகிறார்கள் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களின் கல்வி, ஆற்றல், திறன் ஆகியவற்றை மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குவதே முக்கிய நோக்கம். அதன் அடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் தனி திறமைகளை கண்டறிந்து, அடுத்து என்ன படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும்.

தமிழில் தனித்திறமை பெறுவது, ஆங்கிலத்தில் எழுதுவது, சரளமாக பேசுவது, சிறப்புப் பயிற்சியுடன் கூடிய நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்வது போன்ற பயிற்சிகள் அளிப்பதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சம். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 32 பொறியியல் கல்லூரிகளில் 2,468 மாணவர்களும், 22 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 5442 மாணவர்களும் என மொத்தம் 7,910 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற்று பல்நோக்கு திறன் கொண்டவர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

The post நான் முதல்வன் திட்டத்தில் 7,910 மாணவர்களுக்கு பல்வேறு பிரிவில் பயிற்சி கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: