நாமக்கல், டிச.17: எருமப்பட்டி கைகாட்டி சிலோன் காலனியில் வசிக்கும் மக்கள், நேற்று கலெக்டர் ஆபீசுக்கு திரண்டு வந்து, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: இலங்கையில் இருந்து இந்தியா வந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், சிலோன் காலனியில் கடந்த 1976ம் ஆண்டு 500 சதுர அடியில் வீடுகள் கட்டி தரப்பட்டது. அப்போது, வேலைவாய்ப்பு இல்லாததால், ஏராளமானோர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர். இதனால், அவர்களுக்கான வீடுகளை, அப்பகுதியில் வசித்து வந்த வீடு இல்லாத ஏழை கூலி தொழிலாளர்களிடம், ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு ஒப்பந்ததாரர் எழுதி கொடுத்துவிட்டார். பின்னர், அந்த வீடுகள் எங்களுக்கு தரப்பட்டது. கடந்த 30 ஆண்டாக அங்கு குடியிருந்து வருகிறோம். எனவே, வீடுகளை எங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post சிலோன் காலனி மக்களுக்கு வீடுகள் பட்டா மாற்றம் appeared first on Dinakaran.