×

நம்மாழ்வார் விருது வழங்க நிலத்தில் மண் பரிசோதனை

*வேளாண் துணை இயக்குனர் ஆய்வு

நெமிலி : நெமிலி அருகே நம்மாழ்வார் விருது வழங்க, இயற்கை விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. இதனை வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த ஜாகீர் தண்டலம் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி ஜோதி நம்மாழ்வார் விருதுக்கு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இயற்கை விவசாயி நிலத்தில் வேளாண்மை துணை இயக்குனர்(திட்டம்) செந்தில் ராஜ் தலைமையில் உதவி இயக்குனர் விதை சான்றளிப்பு துறை, தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள் குழு நேற்று ஜோதி நிலத்தில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில் விவசாய வயலில் மண் பரிசோதனை, ஒருங்கிணைந்த விவசாயம் செய்யப்படுகிறதா, ரசாயன வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு செய்தனர். மேலும் இயற்கை விவசாயம் செய்யப்படுவது குறித்து கேட்டறிந்தனர். இதில் நெமிலி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருணா குமாரி, துணை வேளாண்மை அலுவலர் பரமசிவம், உதவி வேளாண்மை அலுவலர் பிரியா, ராமதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post நம்மாழ்வார் விருது வழங்க நிலத்தில் மண் பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Nammalwar ,Deputy Director ,Nemili ,Deputy Director of ,Ranipet district ,Zaheer Thandalam ,
× RELATED மதுக்கூர் வட்டாரத்தில் உலக மண்வள தினம்