மொடக்குறிச்சி,டிச.17: சிவகிரி பேரூராட்சியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் மூன்று வார்டுகளில் மூன்று இடங்களில் மழைநீர் வடிகால் வசதியுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இப்பணிகளுக்கான பூமி பூஜை பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வார்டில் உள்ள அண்ணா தெருவில் நடைபெற்றது.
சிவகிரி பேரூராட்சித் தலைவர் பிரதீபா கோபிநாத் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல், சிவகிரி பேரூராட்சி துணைத் தலைவர் கோபால்,செயல் அலுவலர் சாந்தி, பேரூராட்சி கவுன்சிலர் பெருமாள் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post ஈரோடு ரூ.1.12 கோடி மதிப்பில் புதிய சாலைக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.