- திருவண்ணாமலை
- கார்த்திகை தீபா
- ஈரோடு
- எரோட்டோ
- கார்த்திகை தீபா விழா
- கார்த்திகை தீப திருவிழா
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
- ஈரோடு மண்டலம்
ஈரோடு,டிச.13: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கார்த்திகை தீப திருவிழா இன்று(13ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் ஈரோட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக 75 சிறப்பு பஸ்கள் நாளை(14ம் தேதி) இயக்கப்பட உள்ளது.
மேலும், பொதுமக்கள் செல்லும் ஊர்களுக்கு வழிகாட்டவும்,பயணிகளை ஏற்றி, இறக்கவும் பயணிகளுக்கு பயணம் தொடர்பான உதவிகளை செய்யும் வகையிலும்,கோயில் அருகிலும் சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என போக்குவரத்துக்கழக மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
The post கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.