×

போதை மாத்திரையால் வாலிபர் சாவு

 

ஈரோடு,டிச.16: ஈரோடு சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த யுவராஜ் மகன் ஸ்ரீநாத் (22). கட்டிட தொழிலாளி. இவருக்கு அனைத்து தீய பழக்கங்களும் இருந்தது. கடந்த 3 வருடங்களுக்கு முன் போதை மாத்திரை உபயோகித்ததாக ஈரோடு தெற்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இருப்பினும், போதை மாத்திரை உட்கொள்ளும் பழக்கத்தை விட முடியாமல் இருந்த ஸ்ரீநாத்,நேற்று முன்தினம் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு ஸ்ரீநாத் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

The post போதை மாத்திரையால் வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Yuvaraj ,Srinath ,Kalyanasundaram Road, Shastri Nagar, Erode ,Erode South Police ,
× RELATED ஆண் சடலம் மீட்பு