×

கதவணையில் தேக்கப்பட்ட தண்ணீர் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை

 

கோபி,டிச.16: கோபி கச்சேரி மேடு பகுதியில் நீதிமன்றம், டி.எஸ்.பி அலுவலகம்,காவல் நிலையம், யூனியன் அலுவலகம், நகராட்சி அலுவலகம்,நெடுஞ்சாலைத்துறை அலுவலகம்,தாலுகா அலுவலகம்,கோட்டாட்சியர் அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் பெரும்பாலும் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், பழக்கடைகள் அதிகளவில் உள்ளது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு குரங்குகள் இப்பகுதிக்கு வந்தது.

இவை டீக்கடை,ஓட்டல்,பழக்கடைகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை எடுத்து செல்வதும், குரங்குகளை விரட்டினால் கடிக்க வருவதும் வாடிக்கையாக உள்ளது. அதேபோன்று கடை முன்பு வைக்கப்பட்ட உள்ள பொருட்களை கீழே தள்ளி உடைப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் ஒவ்வொரு நாளும் கடை உரிமையாளர்கள் குரங்குகளால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில், குரங்குகளை பிடித்து அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கதவணையில் தேக்கப்பட்ட தண்ணீர் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Gopi ,Gopi Kachcheri Medu ,taluka ,Dinakaran ,
× RELATED கோபி தலைமை அஞ்சலகத்துடன் கிளை தபால்...