×

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் பலி எண்ணிக்கை 45,000 ஐ தாண்டியது

டெய்ர் அல் பலா: காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலி எண்ணிக்ை 45,000 ஐ தாண்டியது. பாலஸ்தீன ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து கடுமையான தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்த தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் கடத்திச் சென்றது. இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் அரசு போர் தொடுத்தது. 13 மாதங்களாக நடந்து வரும் மோதலில், காசா முனையில் இதுவரை 45,028 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா மருத்துவ அமைச்சகம் தெரிவித்தது.

காசா மருத்துவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மொத்தம் 45,028 பேர் கொல்லப்பட்டனர். இதில் பாதிப்பேர் பெண்கள், சிறுவர்கள் ஆவர்.1 லட்சத்து 69 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். உண்மையான பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் கட்டிட இடிபாடுகளில் மருத்துவ குழுவினர் செல்ல முடியாத இடங்களில் உடல்கள் கிடக்க வாய்ப்பு உள்ளன.இஸ்ரேலுக்கும் ஹமாஸ்க்கும் இடையே நடந்த போர்களில் இந்த போரில்தான் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் தொடர்

தாக்குதல்: இதற்கிடையில், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பு அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவில் அதிபராக இருந்த பஷார் அல் அஸாத் ஆட்சி கவிழ்ந்த பிறகு சிரியாவில் உள்ள ஏவுகணை கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேல் வான் வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த செயல்பாடு வன்முறை தாக்குதல் ஆகும். இதில் சிரிய ராணுவத்தின் வான்வழி பாதுகாப்பு அமைப்பு கருவிகளை இஸ்ரேல் அழித்து உள்ளது. சிரிய எல்லையில் உள்ள ஒரு பகுதியையும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இந்த தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் கருது்து எதுவும் கூறவில்லை.

The post காசாவில் இஸ்ரேல் தாக்குதல் பலி எண்ணிக்கை 45,000 ஐ தாண்டியது appeared first on Dinakaran.

Tags : Israel ,Gaza ,Hamas ,Dinakaran ,
× RELATED தொடர்ந்து நீடித்து வரும் போர்:...