×

2025ம் ஆண்டு இறுதிக்குள் வங்கதேசத்தில் தேர்தல்: அரசு தலைமை ஆலோசகர் கருத்து

டாக்கா: இந்திய படைகளிடம் பாகிஸ்தான் ராணுவம் சரண் அடைந்த நாளை ஆண்டுதோறும் விஜய் திவாஸ் என்ற பெயரில் நினைவு கூரப்பட்டு வருகின்றது. இந்தியாவின் வெற்றி வங்கதேசத்தின் விடுதலைக்கு வழிவகுத்தது. விஜய் திவாசையொட்டி அந்நாட்டின் இடைக்கால அரசு தலைமை ஆலோசகர் முகமத் யூனுஸ் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், நாட்டில் அனைத்து முக்கிய சீர்திருத்தங்களையும் முடித்துவிட்டு தேர்தலை நடத்துமாறு அனைவரிடமும் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அரசியல் கருத்தொற்றுமை காரணமாக சிறு சீர்திருத்தங்களுடன் வாக்காளர் பட்டியலை குறைபாடற்ற முறையில் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றால் 2025ம் ஆண்டு இறுதிக்குள் அல்லது 2026ம் ஆண்டின் முதல் பாதியில் தேர்தலை நடத்துவது சாத்தியமாகும்\” என்றார். மேலும் அவர் கூறும்போது, நாடு அதன் சொந்த தவறுகளாலும், தாமதம் மற்றும் அரக்கதனமான எதேச்சதிகார அரசு அதிகாரத்தை கைப்பற்றியதாலும் சாதனைகளை கட்டியெழுப்ப முடியவில்லை என்றார். தனது உரையில் வங்கதேச நிறுவன தலைவர் முஜ்புர் ரஹ்மான் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

The post 2025ம் ஆண்டு இறுதிக்குள் வங்கதேசத்தில் தேர்தல்: அரசு தலைமை ஆலோசகர் கருத்து appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Dhaka ,Vijay Diwas ,India ,Mohammad Yunus… ,Government ,Dinakaran ,
× RELATED பள்ளி பாடபுத்தகங்களில் வங்கதேச தந்தை...