×

காட்டாற்று வெள்ளத்தால் கொடைக்கானல் மேல்மலை கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் அவதி

கொடைக்கானல்: கொடைக்கானலில் மேல்மலை கீழான வயல் கிராமத்தில், காட்டாற்று வெள்ளத்தால் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொடைக்கானல் மேல்மலை, மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட, கீழான வயல் மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் குடிநீர் தேவை மற்றும் பாசன தேவைக்காக, புலி பிடித்த ஓடை குளம் உள்ளது. கடந்த நான்கு நாட்களாக மேல் மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழைக்கு, ஓடையின் கரை உடைந்தது, குளத்தில் இருந்த நீர், காட்டாற்று வெள்ளமாக மலைச்சரிவுகளில் பாய்ந்து சென்றது.

இதனால் கிராமத்திற்கு செல்லும், சாலை சேதமடைந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் கீழான வயல் கிராம மக்கள் வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் உடைப்பு ஏற்பட்ட குளத்தை சீரமைத்து, சாலையை சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காட்டாற்று வெள்ளத்தால் கொடைக்கானல் மேல்மலை கிராம சாலை துண்டிப்பு: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Godiakanal Malmalmalai ,Katatu ,Kodaikanal ,Vail ,Malmalai ,Godaikanal ,Lower Vayal ,Mannavanur ,Godiakanal Malmallai ,Kattatu ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல்-பெரியகுளம் மலைச்சாலையில்...