- கன்னியாகுமரி மாவட்டம்
- கிறிஸ்துமஸ்
- கன்னி மேரி
- கிரிஸ்துவர்
- இயேசு கிறிஸ்து
- பூமியில்
- தேவன்
- கன்னியாகுமாரி
- மாவட்டம்
கன்னியாகுமரி: கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தேவ மைதனான இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளையே கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். வண்ண, வண்ண கிறிஸ்துமஸ் மரங்களையும், வித, விதமான நட்சத்திரங்களையும் வாங்கி வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை வரும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக டிச.24ம் தேதியும் கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 28-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
The post கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச.24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ..!! appeared first on Dinakaran.