மேட்டூர், டிச. 9: சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு செல்லும் தண்ணீரில், நேற்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து சென்றது. சிவப்பு நிற பனியன், கருப்பு நிற முழுக்கால் சட்டையுடன் சடலம் மிதந்து சென்றதால், காவிரி கரையில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள், துணி துவைத்துக்கொண்டு இருந்த பெண்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது மேட்டூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த மேட்டூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், காவிரியில் மிதந்து சென்ற சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. அவரது பனியன் பாக்கெட்டில், மேச்சேரியில் இருந்து மேட்டூர் செல்லும் பஸ் டிக்கெட் இருந்தது. எனவே, இறந்தவர் மேச்சேரியை சேர்ந்தவரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மேட்டூர் காவிரியில் மிதந்து சென்ற சடலம் appeared first on Dinakaran.