இடைப்பாடி, டிச.11: இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், வளையசெட்டியூர், பில்லுக்குறிச்சி, காசிக்காடு, ஓனாம்பாறை, காட்டுவளவு, சித்தூர் பிரிவு ரோடு, மூலப்பாறை, நாவிதன்குட்டை, நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடகம், மலங்காடு, அரசிராமணி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். தற்போது செங்கரும்புகள் வளர்ந்துள்ள நிலையில் கரும்புகளில் விவசாயிகள் சோவை உரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தை பொங்கல் மற்றும் இதர பண்டிகை தொடர்ந்து வர உள்ளதால், வெளி மாவட்ட வியாபாரிகள் விற்பனைக்காக எடுத்து செல்ல தற்போது இருந்தே, இப்பகுதிக்கு வருகை புரிந்து செங்கரும்புகளை புக்கிங் செய்து வருகின்றனர்.
The post செங்கரும்புகளை புக்கிங் செய்யும் வியாபாரிகள் appeared first on Dinakaran.