முதலில் மக்களை சந்திங்க… கூட்டணி அப்புறம்தான்…விஜய்க்கு பிரேமலதா அட்வைஸ்

சேலம்: சேலத்திற்கு நேற்று மாலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழ்நாட்டில் நெசவு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, சேலம் இடங்கணச்சாலையில் தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தொழில் நன்றாக இருந்தால், ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை ஒன்றிய அரசு விதிக்கலாம். ஆனால், மிகவும் நலிவடைந்துள்ள நிலையில் வரி விதிப்பை மேற்கொள்கின்றனர். அதனால், ஒன்றிய அரசு, ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும்.

அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு, பலமுறை பதில் சொல்லிவிட்டேன். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்கிறது. விஜய் கட்சியுடன் கூட்டணி அமையுமா என்கிறீர்கள். அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவர் முதலில் மக்களை சந்திக்கட்டும். தன்னை நிரூபிக்கட்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு, ஒரு வார்த்தையில் பதில் சொல்ல முடியாது. 140 கோடி மக்களின் எதிர்காலம் அதில் இருக்கிறது. அதனால், உரிய விளக்கத்தை ஒன்றிய அரசு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post முதலில் மக்களை சந்திங்க… கூட்டணி அப்புறம்தான்…விஜய்க்கு பிரேமலதா அட்வைஸ் appeared first on Dinakaran.

Related Stories: