வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட‘கிரீன் மேஜிக் பிளஸ்’ ஆவின் பால் அறிமுகம்

சென்னை: ஆவின் நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை மெட்ரோ மூலமாக ஆவின் பால் மற்றும் 200 வகையான பால் உபப்பொருட்கள் நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் விற்பனையை அனைத்து நகர வெளிப்புறப் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் வகையில் 2 லட்சம் லிட்டர் பால் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிப்புற பகுதிகளில் சில்லரை விற்பனையாளர்களின் குளிர்சாதன செலவினங்களை கருத்தில் கொண்டும், தற்பொழுது குழந்தைகள் மற்றும் பொதுமக்களிடையே வைட்டமின் ஏ மற்றும் டி சத்து குறைபாடு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதால் அதற்கு ஏற்றவாறு 4.5 கொழுப்பு சத்து மற்றும் 9 சதவீதம் இதர சத்துக்களுடன் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ என்ற புதிய வகை பால் சில்லரை விற்பனையாளர்களுக்கு சற்று அதிக கமிஷனுடன் சில ஒன்றியங்களில் மட்டும் குறைந்த அளவில் உற்பத்தி செய்து அதன் சந்தையை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சில்லரை தட்டுப்பாடு காரணமாக 450 எம்.எல் ரூ.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் அனைத்து வகை பாலின் விற்பனை அளவையும் குறைக்கவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட‘கிரீன் மேஜிக் பிளஸ்’ ஆவின் பால் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: