×

ஜார்ஜியா அதிபராக முன்னாள் கால்பந்து வீரர் தேர்வு

டிபிலிசி: ஜார்ஜியாவின் புதிய அதிபராக முன்னாள் கால்பந்து வீரர் மிக்கேல் கவேலஷ்விலி தேர்வு செய்யப்பட்டார். ரஷ்யாவிற்கு அருகில் உள்ள நாடு ஜார்ஜியா. இந்த நாட்டில் அதிபர் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடைமுறை இருந்தது. கடந்த 2017ம் ஆண்டு அதிபரை நேரடியாக தேர்வு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், அதிபர் தேர்தலில் ஆளும் ஜார்ஜியன் ட்ரீம் கட்சி வேட்பாளராக முன்னாள் கால்பந்து வீரர் மிக்கேல் கவேலஷ்விலி அறிவிக்கப்பட்டார்.

நேற்று நடந்த தேர்தலில் மிக்கேல் கவேலஷ்விலி புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.300 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 224 வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை பதவியில் இருந்து விலகும் அதிபரான சலோமி சொராப்பிச்விலி புறக்கணித்தார். தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் எனவே மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

The post ஜார்ஜியா அதிபராக முன்னாள் கால்பந்து வீரர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Georgia ,Tbilisi ,Mikael Cavelashvili ,Russia ,President ,Dinakaran ,
× RELATED ஜார்ஜியா அதிபராக முன்னாள் கால்பந்து வீரர் தேர்வு