×

கொழும்பு துறைமுக புதிய முனைய திட்டத்தை அதானி நிறுவனத்தின் சொந்த நிதியில் மேற்கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை: இலங்கை அமைச்சர் விளக்கம்

கொழும்பு: இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் புதிய முனையம் அமைப்பதற்கான பணியை அதானி நிறுவனம் மேற்கொள்கிறது. இதற்கு அமெரிக்க நிறுவனம் தரும் வேண்டாம் என்று அதானி குழுமம் அண்மையில் அறிவித்தது. இந்த நிலையில்,இலங்கை நாட்டின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க கொழும்பு துறைமுகத்தில் நடந்து வரும் பணிகளை பார்வையி்ட்டார். அப்போது அவர் கூறுகையில்,‘‘ அதானி நிறுவனத்தின் சொந்த நிதியின் திட்டப்பணிகள் மேற்கொள்ளபடுவதில் எந்த பிரச்னையும் இல்லை. மன்னாரில் அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டம் இலங்கையின் நலன்களுக்கு எதிரானது என்பதால் அதனை எதிர்க்கிறோம் என்றார்.

 

The post கொழும்பு துறைமுக புதிய முனைய திட்டத்தை அதானி நிறுவனத்தின் சொந்த நிதியில் மேற்கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை: இலங்கை அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Adani Company ,Colombo Port ,Minister ,Colombo ,Sri Lanka ,Adani Group ,Minister of Ports and Civil Aviation ,Sri ,Lanka… ,Dinakaran ,
× RELATED அதானி நிறுவனத்துடனான இரு ஒப்பந்தங்கள் ரத்து: கென்யா அரசு அறிவிப்பு