×

சேலம் உருக்காலை அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்ற தொ.மு.ச. நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை: சேலம் உருக்காலை அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்ற தொ.மு.ச. நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (13.12.2024) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், சேலம் உருக்காலை அங்கீகாரத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் நிர்வாகிகளான சிவகுமார், செந்தில்குமார், துரைராஜ் பாரதிராஜா மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளான ரவிச்சந்திரன், பூபாலன் சுந்தரகிருஷ்ணன், கதிர்வேல் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும், சேலம் உருக்காலையை பொதுத் துறை நிறுவனமாக தொடர்ந்து இயங்கிட, ஒன்றிய அரசிடம் போராடி, வெற்றி பெற செய்து தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சேலம் உருக்காலை அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்ற தொ.மு.ச. நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது, கழகப் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், சேலம் மத்திய மாவட்டச் கழகச் செயலாளரும் அமைச்சருமான இராஜேந்திரன், தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பேரவைத் தலைவர் கி. நடராஜன், கழக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், சேலம் மாவட்ட தொமுச கவுன்சில் தலைவர் வி.மணி ஆகியோர் உடனிருந்தனர்.

The post சேலம் உருக்காலை அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்ற தொ.மு.ச. நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர் appeared first on Dinakaran.

Tags : SALEM URUKALLI RECOGNITION ,M. Sat ,Chief Executive Officer ,Mu. K. ,Stalin ,Chennai ,Gov. ,Tho ,Salem Urkalai ,Chief Minister ,Tamil Nadu ,Association ,K. ,Chennai, ,Anna ,Salem ,Urkalai ,M. Sat. ,
× RELATED “பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி...