×

சென்னை மாரத்தான் ஓட்டத்தில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி வீரர்கள் சாதனை

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (ஓடிஏ) பயிற்சி மேற்கொண்டு வரும் இளம் அதிகாரிகள் பலர் பங்கேற்று சாதனைபுரிந்துள்ளனர். இதில், மகளிர் 10 கி.மீ. பிரிவில் ஓடிஏ அகாடமி அண்டர் ஆபீசர் பிரகதி தாக்கூர் 2ம் இடம் பிடித்தார். மொத்தம் 13 பயிற்சி அதிகாரிகள் இந்த மாரத்தானில் கலந்து கொண்டனர்.

அவர்களில் 12 பேர் 10 கிமீ பிரிவிலும், ஒருவர் 21 கிமீ பிரிவிலும் பங்கேற்றனர். மேலும், அகாடமியின் 8 அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். அவர்களில் 7 பேர் 21 கி.மீ. தொலைவுகொண்ட அரை மாரத்தானிலும், ஒருவர் 42 கி.மீ. முழு மாரத்தானிலும் கலந்துகொண்டு, ஓட்டத்தை நிறைவு செய்தனர்.

The post சென்னை மாரத்தான் ஓட்டத்தில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி வீரர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Chennai Marathon ,Chennai Military Officers Training Academy ,OTA ,Chennai ,OTA Academy ,Officer ,Pragati… ,
× RELATED மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு 5ம் தேதி...