கண்டலேறு அணையில் இருந்து ஜீரோ பாயிண்டிற்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

ஊத்துக்கோட்டை, டிச. 12: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, ஆந்திரா-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், 3 டிஎம்சி சேதாரம் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இந்நிலையில், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டது. பின்னர், படிப்படியாக உயர்த்தி 1200 கன அடியாகவும், மறுநாள் 1300 கன அடியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.

தொடக்கத்தில், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் வினாடிக்கு 195 கன அடியாகவும் பின்னர் படிப்படியாக உயர்த்தி 220 கன அடி வரை உயர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது, இந்நிலையில், கடந்த வாரம் கண்டலேறுவில் 700 கன அடி தண்ணீர் குறைத்து திறக்கப்பட்டுள்ளதால், தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டில் தண்ணீர் அளவு குறைந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 1600 கன அடி வீதம் உயர்த்தி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் தற்போது 320 கன அடி வீதம் கால்வாய் நிரம்பி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

The post கண்டலேறு அணையில் இருந்து ஜீரோ பாயிண்டிற்கு கூடுதல் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: