புழல்: புழல் அருகே அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். மாதவரம் மண்டலம் புழல் அடுத்த சூரப்பட்டு சென்னை நடுநிலைப்பள்ளியில் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், முருகாம்பேடு சென்னை தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் சென்னை மாநகராட்சி சார்பில் சுமார் ₹2 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடத்தினை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிலையில், திறந்து வைக்கப்பட்ட 2 பள்ளிகளுக்கும் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ மேற்பார்வையில், மாதவரம் மண்டலக்குழு தலைவர் எஸ்.நந்தகோபால், மாதவரம் மண்டல அலுவலர் திருமுருகன், செயற்பொறியாளர் கார்த்திகேயன், 32வது வார்டு கவுன்சிலர் ஏழுமலை, உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் தினேஷ் ராவ் ஆகியோர் பள்ளிகளுக்குச் சென்று மாணவ – மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்வில் மாநகராட்சி கல்வி அலுவலர் வசந்தி, உதவி கல்வி அலுவலர் கிரிஸ்டல் சுகந்தி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாந்தி, ஜெமிமா யூனிஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் துரை ராமுலு, அமுதன் பாஸ்கர், பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், 32வது வார்டு திமுக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முருகாம்பேடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மயில்வேலன் நன்றி கூறினார்.
The post புழல் பகுதி அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்: காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.