திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங். சார்பில் கிராம சீரமைப்புக்கான ஆலோசனை கூட்டம்: எம்பி பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளுர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கிராம மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சசிகாந்த் செந்தில் எம்பி பங்கேற்று ஆலோசனைகள் வழங்கி பேசினார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கிராம சீரமைப்புக்கான ஆலோசனைக் கூட்டம் வீராபுரத்தில் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் லயன் ஆர்.எம்.தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சதா பாஸ்கரன், புழல் குபேந்திரன், எம்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். வேப்பம்பட்டு கே.ஆர்.அன்பழகன் வரவேற்றார். இதில், திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் ஆலோசனைகள் வழங்கி பேசுகையில், கிராம மக்களை திரட்டி, கிராம காங்கிரஸ் கமிட்டியில் சேர்க்க வேண்டும். இதில் கையெழுப்புதல் மூலம் நிர்வாகிகள் 2 பேரை வட்டார காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள். இவ்வாறு ஒவ்வொரு வட்டாரத்திலிருந்து வரும் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள். எனவே காங்கிரஸில் அடிமட்டத்திலிருந்து பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்றார்.

மேலும் பொதுச் செயலாளர்கள் காஞ்சி ஜி.வி.மதியழகன், வழக்கறிஞர் தாமோதரன், காண்டீபன் ஆகியோர் பேசினர். இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் லயன் ரமேஷ், சிதம்பரம், மாநில நிர்வாகிகள் இமயா கக்கன், வழக்கறிஞர் அருணாசலம், பொன்.ரவி, தரணி பாய், மாநகராட்சி கவுன்சிலர் சங்கீதா பாபு, மாவட்ட நிர்வாகிகள் டெல்லி சுரேஷ், கதிர்வேடு பாபு, தீனாள், ஜெயச்சந்திரன், ரமேஷ், பேன்சி பாபு, ஜெயபால், அச்சுதன், வட்டார, நகர, சர்க்கிள், பேரூர் தலைவர்கள் சிவசங்கர், ராமுலு, சாந்தாராம், விஸ்வநாதன், தேவேந்திரன், பொன்ராஜ், மதுசூதன ராவ், வயலை வெங்கடேசன், கே.வி.ராஜன், சேகர், சுரேஷ், இமைய வர்மன், சேதுபதி, எம்பெருமான், நித்யானந்தம், சுப்புலட்சுமி, ஏ.பி.சங்கர், வெங்கடேசன், அருண்குமார், சந்திரசேகரன், வெங்கடேசன், ராஜீவ் காந்தி, வேல்முருகன், மணிகண்டன், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தலைவர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

The post திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங். சார்பில் கிராம சீரமைப்புக்கான ஆலோசனை கூட்டம்: எம்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: