திருத்தணி: திருத்தணி அருகே தீப்பெட்டி கொடுக்காததால் பீர் பாட்டிலால் வாலிபரின் மண்டையை உடைத்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அரக்கோணம் வட்டம், கீழந்தூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் (32) என்பவர் நேற்று முன்தினம் இரவு திருத்தணி அருகே டி.புதூர் பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த வாலிபர்கள் 3 பேர் அசோக்குமாரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர். அதற்கு அவர் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை வாலிபர்கள் அசோக்குமாரை ஆபாச வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தலை மற்றும் கை பகுதியில் தாக்கியுள்ளனர். இதில் மண்டை உடைந்த அசோக் குமார், தன்னை தாக்கிவிட்டு கொலைமிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் திருத்தணியைச் சேர்ந்த ஆனந்தன் (29), முருகன் (36), சுபாஷ் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
The post தீப்பெட்டி கொடுக்காததால் வாலிபரின் மண்டை உடைப்பு appeared first on Dinakaran.