தேவையூர் ஊராட்சி 10வது வார்டில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தார்சாலையாக மேம்படுத்த வேண்டும்

 

பெரம்பலூர், டிச.10: வண்டிப் பாதை ஆக்கிரமிப்பினை அகற்றி, தார் சாலையாக தரம் உயர்த்தித் தர வேண்டும் என்று தேவையூர் கிராம விவசாயிகள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அ ளித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் நடை பெற்றது. வேப்பந்தட்டை தாலுக்கா, தேவையூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 30 பேர் வந்து அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

தேவையூர் ஊராட்சி 10-வது வார்டு தெற்குப் பகுதியில் உள்ள வண்டிப்பாதை, மழைக்காலத்தில் மழைநீர் சூழ்ந்து கொள்கிறது. மேலும் காட்டுப் பகுதியில் இருந்துவருகின்ற மழைநீர் அப்பகுதியில் தேங்கி நிற்ப தால் கிராம பொதுமக்கள், விவசாயிகள் நடப்பதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே அப்பகுதியைச் சேர்ந்தநூற்றுக்கணக்கான விவசாயிகளின் போக்கு வரத்து வசதிகளுக்காக வண்டிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்தப் பாதையை, தார் சாலையாகத் தரம் உயர்த்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post தேவையூர் ஊராட்சி 10வது வார்டில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தார்சாலையாக மேம்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: