ஜெயங்கொண்டம், டிச.8: ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் பாராமெடிக்கல் கல்லூரியில் 21ம் ஆண்டு நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்வி குழும தலைவர் பரப்ரம்மம் முத்துக்குமரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் உஷா, செயலாளர் வேல்முருகன், இயக்குனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நர்சிங் பயிற்சி முடித்த மாணவியர்களுக்கு வடலூர் இந்தியன் கல்வி குழுமம் தாளாளர் தெய்வ பிரகாசம், ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் பொன்முடி, இந்தியன் கல்விக்குழுமம் முதல்வர் ஜான்சிராணி, சுந்தர், வின்சென்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து செவிலித்தாய் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதி மொழியினை முதல்வர் சுருதி வாசிக்க மருத்துவமனை பயிற்சிக்கு செல்லும் நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னதாக ஜெயங்கொண்டம் குமார் பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் சத்யா வரவேற்றார். நிறைவில் டாக்டர் ராஜு நன்றி கூறினார்.
The post அன்னை தெரசா நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.