திலீப்புக்கு விஐபி தரிசனம் 4 தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த சில தினங்களுக்கு முன் சபரிமலையில் தரிசனம் செய்தார். அவருக்கு விஐபி தரிசனம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. சபரிமலையில் யாருக்கும் விஐபி தரிசனம் அளிக்கக்கூடாது என்று ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு அமலில் இருந்த நிலையில் திலீப்புக்கு விஐபி தரிசனம் அளித்தது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும், போலீசுக்கும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் திலீப் தரிசனம் செய்யும் போது மற்ற பக்தர்களுக்கு சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டது உண்மைதான் என்றும், தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறினார். இந்நிலையில் திலீப்புக்கு விஐபி தரிசனம் அளித்த விவகாரம் தொடர்பாக நிர்வாக அதிகாரி, செயல் அலுவலர் மற்றும் 2 பாதுகாவலர்களுக்கு விளக்கம் கேட்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post திலீப்புக்கு விஐபி தரிசனம் 4 தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: