இந்நிலையில் டிரம்பின் வேண்டுகோளை தொடர்ந்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், ‘அனைத்து பிரிக்ஸ் நாடுகளும் டாலருக்கு எதிராக எந்த புதிய கரன்சியையும் உருவாக்கவில்லை. டாலர் கரன்சியை பலவீனப்படுத்தும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை. பிரிக்ஸ் கரன்சி குறித்த செய்திகள் எதற்காக வெளியாகி உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தியா டாலரின் மதிப்பை குறைக்கும் வேலையில் ஈடுபடவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.
இவ்விவகாரத்தில் பிரிக்ஸ் நாடுகளுக்கு கருத்தியல் ரீதியாக எந்தவொரு நிலைப்பாடும் இல்லை. ஒவ்வொரு நாடும் தங்களுக்கு என்று தனியாக சொந்த கருத்தை கொண்டிருக்கலாம்’ என்று கூறினார். டொனால்ட் டிரம்ப் அடுத்தாண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்பார். அதற்கு முன்னர், டாலரை பலவீனப்படுத்த விரும்பும் நாடுகளுக்கு அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post அமெரிக்க டாலருக்கு எதிராக ‘பிரிக்ஸ்’ கரன்சிக்கு வாய்ப்பில்லை: டிரம்பின் கருத்துக்கு ஜெய்சங்கர் பதில் appeared first on Dinakaran.