அதன்படி, திங்கட்கிழமை முதல் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 125 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வழித்தடத்தில் 20 நிமிட இடைவேளைக்கு ஒரு ரயில் இயக்கப்படும் . இதேபோன்று, செங்கல்பட்டில் இருந்து கடற்கரை வழித்தடத்தில் 30 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இருக்கும். மின்சார ரயில் சேவை குறைப்பால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால், பொதுமக்கள் அதற்கு ஏற்ப தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கம்
சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக, மாநகர் போக்குவரத்து கழகத்தில், நாளை முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் நலன் கருதி வழக்கமாக மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக தாம்பரம் முதல் பிராட்வே வரை கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 5 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி முதல் தி.நகர் வரை 5 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, இப்பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் நாளை முதல் ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில் சேவை: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.