இந்தியாவின் ஜனநாயகத்தை கொன்று, அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுக்கும் : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நமது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேறி திட்டம் அமலானால் அரசியலமைப்பு சட்டமே அர்த்தமற்றதாகிவிடும். மாநில சட்டமன்ற தேர்தல்கள் தங்கள் அரசியல் முக்கியத்துவம், மாநிலங்களின் பன்முகத்தன்மையை அழித்துவிடும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும்.நாட்டின் பன்முகத்தன்மை, ஜனநாயகத்தை ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அழித்துவிடும்.

மேலும் மாநில சட்டமன்ற தேர்தல்கள் தங்கள் அரசியல் முக்கியத்துவம், மாநிலங்களின் பன்முகத்தன்மையை அழித்துவிடும். அதிபர் ஆட்சி முறையை அமல்படுத்தும் நோக்கில் ஒன்றிய அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சி நடைபெறுகிறது. முக்கிய சட்டங்களை நிறைவேற்ற பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. பா.ஜ.க. ஆட்சியின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்பவே திட்டமிட்டு மசோதா தாக்கல் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மக்களின் முக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதில் ஒன்றிய பா.ஜ.க. அரசுதோல்வி அடைந்துவிட்டது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான, நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒரு நாடு ஒரு தேர்தல் முறையை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்க்கும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவின் ஜனநாயகத்தை கொன்று, அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுக்கும் : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: