இதை எதிா்த்து அவா் மேற்கு வங்க தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தாா். அவரை பணிநீக்கம் செய்த உத்தரவை தீா்ப்பாயம் ரத்து செய்தது. மேலும் சட்ட ரீதியாக வாசுதேவ் தத்தாவுக்கு எதிராக பதில் மனுவை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு அனுமதி வழங்கியது.
அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வாசுதேவ் தத்தாவின் பணிநீக்கத்தை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது; ஒருவர் அரசுப்பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் அவரது பின்னணியை சரிபார்க்க வேண்டும்.
பணியில் சேர்ந்தபோது அவர் தாக்கல் செய்த ஆவணங்களின்படி அவரது குணநலன், பின்னணி, தேசியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். அனைத்து மாநிலங்களின் போலீஸ் அதிகாரிகளும் இப்பணியை செய்ய வேண்டும். நன்கு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசுப்பணியில் சேர்ந்த அந்த நபரின் பின்னணியை சரிபார்த்த பிறகுதான் அவரது பணியை வரன்முறை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
The post அரசுப்பணியில் சேர்ந்தவர்களின் ஆவணங்களை 6 மாதங்களுக்குள் சரிபார்க்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.