×

கொங்கம்பாளையம் பகுதியில் சிதிலமடைந்த தார்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

 

ஈரோடு, டிச. 7: ஈரோடு மாநகராட்சி, 5வது வார்டு கொங்கம்பாளையம் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. தவிர ஆயிரக்கணக்கான வீடுகளும் உள்ளன. இப்பகுதியில் இருந்து கங்காபுரம் வழியாக சேலம் பைபாஸ் நெடுஞ்சாலைக்கு செல்லும் தார்சாலை 3 கி.மீ. தூரத்துக்கு மிகவும் பழுதடைந்து, போக்குவரத்துக்கே லாயக்கற்ற வகையில் சிதிலமடைந்துள்ளது. மேலும், மழைக் காலங்களில் சாலையில் உள்ள குழிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரால் எந்த ஒரு வாகனங்களும் செல்ல முடியாத நிலையில் அந்தச் சாலை உள்ளது.

கனரக வாகனங்கள் இதில் செல்வதால் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. எனவே, சிதிலமடைந்துள்ள இந்த தார்சாலையை மீண்டும் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் புதிய தார்சாலை அமைத்து தர மா நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொங்கம்பாளையம் பகுதியில் சிதிலமடைந்த தார்சாலையை சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Konkampalayam ,Erode ,Erode Corporation ,5th Ward Konkampalayam ,Tharshal ,Salem Bypass Highway ,Gangapuram ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் மது போதையில் ஓட்டி வரப்பட்ட...