காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி 592 பயனாளிகளுக்கு ரூ.444.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோர் வழங்கினர். காஞ்சிபுரத்தில் அம்பேத்கரின் 68வது நினைவு நாளையாட்டி, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் 90 தூய்மை பணியாளர்களுக்கு, கலெக்டர் கலைச்செல்வி மோகன் எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.
அதனை தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு வேலை வாய்ப்பும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.7.71 லட்சம் மதிப்பிலான ஓய்வூதியம் தீருதவியும், 40 பயனாளிகளுக்கு ரூ.2.67 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரமும், 10 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகளும், தாட்கோ சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் மற்றும் 17 பயனாளிகளுக்கு ரூ.102 லட்சம் மதிப்பிலான PM-AJAY திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 172 பயனாளிகளுக்கு ரூ.208.22 லட்சம் மதிப்பிலான இ-பட்டாக்களும், 70 பயனாளிகளுக்கு சான்றிதழ்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான அமுத சுரப்பி கடன்களும், 20 பயனாளிகளுக்கு ரூ.5.75 லட்சம் மதிப்பிலான ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு கடன்களும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை (பொது விநியோகம்) சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
மேலும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை (கூட்டுறவு) சார்பில் 106 பயனாளிகளுக்கு ரூ.50.58 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடன்களும், 34 பயனாளிகளுக்கு ரூ.23.97 லட்சம் மதிப்பிலான கேசிசி பயிர் கடன்களும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜான திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான மனம் திருந்தி வாழும் மதுவிலக்கு குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு நிதிகளும்,
வாழ்ந்து காட்டுவோம் மூலம் ரூ.10.98 லட்சம் மதிப்பிலான இணை மானிய திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மற்றும் நுண்நிதி தொழில் கடன் 2 பயனாளிகளுக்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களும், 10 பயனாளிகளுக்கு ரூ.72 லட்சம் மதிப்பிலான சலவை பெட்டிகளும் என மொத்தம் 592 பயனாளிகளுக்கு ரூ.444.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன் ஆகியோர் வழங்கினார். முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், சார் கலெக்டர் ஆஷிக் அலி, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் வே.நவேந்திரன், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடிகுமார், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post அம்பேத்கர் நினைவு நாளையொட்டி 592 பயனாளிகளுக்கு ரூ.444.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏக்கள் வழங்கினார் appeared first on Dinakaran.