×

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நாளை மறுதினம் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (27ம் தேதி) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Collector ,Arunraj ,District ,welfare ,Dinakaran ,
× RELATED உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்...