காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சந்தைப்படுத்தல் கொள்கை திட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி நகல் எரிக்கும் போராட்டம் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் மாவட்ட தலைவர் சாரங்கன் தலைமை தாங்கினார். இதில், விவசாயிகள் போராட்டத்தால் பாஜ மோடி அரசு திரும்ப பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை பின்வாசல் வழியாக கொண்டு வரும் திட்டம் வேளாண் சந்தைப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
நொய்டாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும். விவசாய விலைபொருட்களுக்கு ஆதார விலை சட்டமாக்க வேண்டும், விவசாயிகள், விவசாய தொழில்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட செயலாளர் நேரு விளக்கி பேசினார். இந்த, போராட்டத்தில் விவசாய சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் நந்தகோபால். முருகேசன், ஆனந்த், செல்வம், தங்கராஜ், கணேசன், கங்காதரன், வரதன், பெருமாள், சுகுமார், பன்னீர்செல்வம், தமிழரசு, ஆனந்தகுமார், தாண்டவராயன், வீரராகவன், ரமணதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் நகல் எரிப்பு போராட்டம் appeared first on Dinakaran.