மகரராசி குமரப் பருவம் கொஞ்சும் பருவம்

தங்களை மிகவும் அழகாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். தாங்கள் உடுத்துவதற்கான உடைகளைத் தாங்களே செலக்ட் செய்து அதை உடுத்திக் கொள்வார்கள். இவர்களின் உடைகள், ட்ரெண்டியாகவும் இருக்கும். பண்பாடு மாறாமல் கண்ணியமாகவும் பாராட்டும் வகையிலும் இருக்கும். எந்த இடத்திலும் பளிச்சென்று சுத்தமான மடிப்பு கலையாத உடை, நல்ல ஷூ அல்லது செருப்பு, சிறப்பான பண்பான தலை அலங்காரம் என்று ஒரு சூப்பர் மாடல் குமரராக இருப்பார்கள். எதிர்பாலினர் தன்னை பார்க்கின்றாரா என்பதை அடிக்கடி உறுதி செய்வர்.

செலவு செய்வதில்கர்ணன்

மகரராசி குமரர்களுக்குப் பாராட்டுதான் முக்கியமே தவிர, பணம் காசு முக்கியமல்ல. இளம்வயதிலேயே இவர்களுக்கு கையில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்து, அதை முறையாக செலவழிக்கவும், அதற்குக் கணக்கு வைக்கவும், பெற்றோர்கள் சொல்லித் தரவேண்டும். இல்லையென்றால் வளர்ந்த பிறகு ஊதாரியாக மாறிவிடுவர். நண்பர்களுக்கு தண்ணீர் போல் செலவு செய்வர். நண்பர்களுடன் சுற்றுலா செல்வர்.

வெற்றி வேட்கை

மகரராசி குமரர், இளம் வயதிலேயே எல்லா போட்டிகளிலும் முதலாவதாக வரவேண்டும், எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும், புதிய புதிய துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற வெற்றி வெறியுடன் வேட்கையுடன் வளர்ந்து வருவர். போட்டி என்று வந்துவிட்டால், தனது வெற்றிக்காக சிறு வயது முதல் எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.

உழைப்புக்கு அஞ்சாத உத்தமர்

மகரராசிக் குமரர், எவ்வளவு நேரம் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாலும் பள்ளி, கல்லூரி நாட்களிலேயே கடுமையாக உழைக்கத் தயாராகிவிடுவர். உழைப்புக்கு அஞ்ச மாட்டார்கள். விடிய விடிய நூல்களைத் தேடி வாசித்துக் குறிப்புகள் எடுத்து ஒரு பேச்சுப் போட்டிக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வார்கள். பள்ளி ஆசிரியர்களிடமும் குடும்பப் பெரியவர்களிடமும் அந்தப் போட்டி குறித்த தகவல்களை ஆர்வத்தோடு கேட்டு அவற்றைத் தமது உரையில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

தன்னம்பிக்கை தங்கம்

மகரராசிக் குமரர்களுக்கு, அடிப்படை தேவை பாராட்டு மட்டுமே. பாராட்டுதான் தன்னம்பிக்கை வளர்க்கும் டானிக். இவர்களின் தன்னம்பிக்கையை நோயாளிக்கு மூன்று வேளை மாத்திரை கொடுப்பது போல அடிக்கடி ஊக்குவிக்க வேண்டும். இவர்களைத் தினமும் இரண்டு மூன்று முறையாவது பாராட்ட வேண்டும். பாராட்டு மட்டுமே இவர்களின் உயிர் நாடியாகும். இவர்கள் தவறு செய்தால்கூட அதை நயமாக சுட்டிக் காட்ட வேண்டுமே தவிர, பட் என்று ஒரு அடி அடித்தாலோ, அறிவில்லையா..? என்று கேட்டாலோ மனம் வெதும்பி நொந்து நூலாகிவிடுவர். தன்னை வைதவர், அடித்தவர் தாயாக இருந்தாலும், ஆசிரியராக இருந்தாலும், இக்குழந்தை பேசாது.

போராட்ட வாழ்க்கை

மகரராசி மாணவர், தனக்குள் மறைந்திருக்கும் அச்சம், தயக்கம், சஞ்சலம் ஆகியவற்றுடன் அன்றாடம் உழல்வதால், போராடுவதால் மற்றவர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டால்கூட அவை ஒரு ஆமை ஓட்டுக்குள் தலையையும், கால்களை இழுத்துக் கொள்வது போல, தனக்குள் சுருங்கிப் போய்விடும். பின்பு இவர்களின் திறமைகள் வெளிவராமல் போய் விடும். இவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர, ஒரு நல்ல ஊக்குநர் எப்போதும் தேவை.

மேடை வெளிச்சம்

வெளியே இயல்பாக வர இயலாமல் கூச்ச சுபாவம் கொண்டுள்ள மகரராசிப் பதின்ம வயதினரை மேடையில் ஏற்றினால், அவர்கள் வேறு விதமாக செயல்
படுவர். ஸ்விட்ச் போட்ட பொம்மை போல படபடவென்று பேசுவர், நடனமாடுவர், பாடுவர், நடிப்பர். மேடை நிகழ்வு முடிந்ததும் நனைந்த கோழி போல் அப்படியே குறுகிவிடுவர்.
(அடுத்த இதழில்…)

முனைவர் செ.ராஜேஸ்வரி

The post மகரராசி குமரப் பருவம் கொஞ்சும் பருவம் appeared first on Dinakaran.

Related Stories: