ஃபெஞ்சல் புயல்; பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

சென்னை: ஃபெஞ்சல் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கழகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திடும் வகையில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார். ஃபெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத மழை பெய்த மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டுவருவதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.கஸ்டாலின் , தி.மு.க. சார்பில் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மாவட்டத்திலுள்ள மக்களுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தியிருந்தார். அந்த அறிவுறுத்தலுக்கிணங்க, அரியலூர் மாவட்டத்தின் சார்பில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அவர்களால் 25,000 உணவுப்பொட்டலங்கள் தயார்செய்யப்பட்டு, விக்கிரவாண்டியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களால், 1 இலட்சம் கிலோ அரிசியை அனுப்பி பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.12.2024) சென்னை அண்ணா அறிவாலயத்திலிருந்து, சென்னை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 1.50 இலட்சம் கிலோ அரிசியை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக அவ்வாகனங்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

 

The post ஃபெஞ்சல் புயல்; பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: